இறைத்தூது (நுபுவ்வத்தில்) சந்தேகத்தை ஏற்படுத்தும் பி.ஜேயின் புதிய ஆய்வு1,860 views

Published: 5 years ago

Category: Error refuting Sahih Hadith by PJ

Description:

சூனியமும் அதன் பாதிப்புகளும் பற்றி புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான அறிவிப்புகள் அடங்கிய ஹதீஸ்கள் வந்துள்ளன. அவை அத்தனையும் மறுக்கும் பி.ஜே தன் புதிய கொள்கையை நியாயப் படுத்த நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தையே கேள்விக்குறியாக்கும் ஆபத்தான ஒரு குறிப்பு இந்த நிகழ்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மாஷா அல்லாஹு வஷிஃத பற்றிய ஹதீசில் இல்லாத கற்பனையை உருவாக்கிய இவர் “ஆஹா, ஆமா, இந்த நுணுக்கமான விசயத்தை நாம கவனிக்காம விட்டு விட்டோமே” என்று ஹதீசில் இல்லாத வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் சொல்வதைப் போல குறிப்பிடுகிறார். இதன் மூலம் மார்க்கத்தில் இவர் நுணுக்கமான விசயத்தைக் கூட ஆய்வு செய்பவர் என்பது போலும் நபி (ஸல்) அவர்கள் கவனிக்காமல் விட்ட விசயங்களும் உண்டு என்பது போலும் ஒரு மாயையை சமுதாயத்தில் விதைத்துள்ளார்.

நபித்துவம் என்பது அல்லாஹ்வடமிருந்துள்ள வஹியின் அடிப்படையில் அமைந்தது. நபியே தெளிவு படுத்தாத விசயங்கள் உண்டு என்ற தோரணையை ஏற்படுத்தியதன் மூலம் அல்லாஹ்வின் ஏற்பாட்டை குறை கண்டுள்ளார். (அல்லாஹ்வே சரணம்)

இமாம் புகாரி போன்றவர்களிடம் இது (சூனியம் பற்றிய) ஆய்வு எடுத்து வைக்கப்பட்டு அவர்களளும் பதில் சொல்ல இயலாமல் திணறி தடுமாறினால்… என்ற வாசகம் இவரைத் தவிர எவரும் திணறி தடுமாறுபவர்கள்- அவர்கள் எவ்வளவு பெரிய இமாம்களாக இருந்தாலும் சரிதான் — என்ற இறுமாப்புக் கொள்கை.

14 நூற்றாண்டுகளாக எவரும் தெளிவு படுத்தாத சூனியத்தில் இணைவைப்பு என்ற இவரது புதியஆய்வு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டது, என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு முரண்படுகிறதே என்பதையேனும் இவரது அனுதாபிகளும் ஆதரவாளர்களும் பின்பற்றுபவர்களும் சிந்திக்கட்டும். அகப்பார்வையுடையோர்களே குழப்பம் நீங்கி தெளிவடைய இருபது நிமிடம் தந்து இந்த நிகழ்படக் கீற்றை காணுங்கள். தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் இந்த செய்தியை எடுத்துச் செல்லுங்கள். சத்தியத்தை சத்தியமாக அறிந்து பின்பற்ற அல்லாஹ்வே உதவி செய்வாயாக.

3 Responses to “இறைத்தூது (நுபுவ்வத்தில்) சந்தேகத்தை ஏற்படுத்தும் பி.ஜேயின் புதிய ஆய்வு”

 1. Sheik Abdullah says:

  Very Beautiful Question at the end Imam asked, Masha Allah, Yes, Bukhari, Muslim, Nasaii, Ahmad All of these scholars collected the Sooniyam related Hadith and they all believed in that, As per this TNTJ PJ veriyarhal, If they all Musrikkeen, then How come TNTJ accept Bukhari, Muslim, Nasaii, Ahmad Hadees ??? Wonderful Question, Masha Allah !!! don’t know what TNTJ PJ Veriyarhal will say,…

 2. nazri says:

  This PJ is dangerous to Islam, his ideology is derived from Mu’thazila, appearance is Muslim, but inside the manifest Kufr yet PJ claim to follow The Quraan and Sunnah to the public but clear deviation from the Ahlussunnah Wal Jamaa’ah methodology. Every Muslim in India and Sri Lanka should get to gather and openly denounce PJ and his ideology which is highly detrimental to the Islamic ideology

 3. Nizamullah says:

  Dear brothers assalamunalaikum!
  Indeed PJ has got a majority of followers! if the followers were becomes brilliant (i.e. verify the quran and hadhees directly)then PJ will lose the majority of followers! that is the reason PJ maintain his capacity as he is the only imam to follow! because of that he ridicule,criticize,mocking the pious predeccessors! including sahabas,thabiyeens,imams and other pious persons who gave their life in the path of ALLAH! and create a doubt on them! and on their work! If you a create doubt on Bukhari.,then the person think that., we dont have enough knowledge as PJ has! instead of following Bukhari Hadheeths we follow PJ because he has the vast knowledge of bukhari hadheeth., and let PJ to decide which bukhari hadees is to be follow or not!
  Like the past, with ALLAH’s support and will, the muslim community will definitely face and win the hazards in the path of Sunnah!
  Ya ALLAH! pour your blessings and hikmah on islamic scholars particularly tamil speaking like ismail salfi and others to face this hindrances!

Leave a Reply