நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் பி.ஜே கொள்கை903 views

Published: 5 years ago

Category: Errors concerning Sahabah by PJ

Tags: ,

Description:

அஸ்ஸலாமு அலைக்கும். பிஸ்மில்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்.

இஸ்லாத்தில் பி.ஜே கொண்டு வந்த புதிய கொள்கைகளை சமுதாயத்தில் ஊடுருவச் செய்வதற்காக நபித்தோழர்களை கேவலப்படுத்தும் கேவலமான நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. கண்ணியத்திற்குரிய நபித்தோழர் அலீ (ரழி) அவர்களைக் குறித்து பி.ஜே ஒரு ஆதாரமற்ற செய்தியைச் சொல்கிறார். சொல்லும் போது அந்த நபித்தோழரை மிகவும் கிண்டலடிக்கிறார். அதவாது அறிவின் தலைவாயில் (அலி) என்று சொல்கிறார்களே, அப்படிப்பட்டவர் குர்ஆனை விளக்குவதில் தவறு செய்து விட்டார் என்று கிண்டல் செய்கிறார். அப்போது சிரிக்கிறார். கூட இருப்பவர்களும் சிரிக்கிறார்கள். சிரிப்பவர்களுள் அன்று இவரின் சிஸ்யராக இருந்து பின்னர் இவரால் ஓரங்கட்டப்பட்டு இப்போது அடையாளம் தெரியாமல் இருக்கும் அபூ ஆசியா என்ற சாகுல் அமீதும் ஒருவர். இவர்களெல்லாம் நபித்தோழரின் கண்ணியத்தை பரிகசித்து சிரித்ததற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்.

இந்த நிகழ் கீற்றில் பி.ஜேயின் தப்புப் பிரச்சாரமும் அதற்கு உருக்கமாக மூத்த அறிஞர் நுஃபார் ஃபாருக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பதிலளிப்பதும் இடம் பெற்றுள்ளது.

இதைப் பார்ப்பவர்கள் பி.ஜே மாயையில் உழன்று கொண்டிருப்பவர்களிடம் கொண்டு சேருங்கள்.

Leave a Reply