ஸஹாபாக்கள் பற்றிய நிலைபாட்டில் தடம் புரண்ட தவ்ஹீத் ஜமாஅத்836 views

Published: 5 years ago

Category: Errors concerning Sahabah by PJ

Tags: ,

Description:

நபித்தோழர்களைப் பின்பற்றுவது குறித்து ஏராளமான குர்னஆன் வசனங்கள் உள்ளன. ஹதீஸ்களும் உள்ளன. சத்திய மார்க்கத்தில் இருந்து தடம் புரண்ட பல குழுக்களை விவரிக்கும் ஹதீஸில் சரியான கூட்டத்தைப் பற்றி விளக்கிய நபி (ஸல்) அவர்கள் அது நானும் எனது தோழர்களும் இருக்கும் வழி என்று சுட்டிக் காட்டினார்கள் என்பது பிரபலமான ஹதீஸ் ஆகும். சத்தியப் பாதையிலிருந்து தடம் புரண்ட கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் என அனைவருமே நபித்தோழர்களைப் புறம் தள்ளினர். நபித்தோழர்கள் தடம் புரண்டு விட்டார்கள் என வாதிட்டனர்.

அந்த வரிசையில் இஸ்லாமிய வரலாற்றில் தமிழகத்தில் தடம் புரண்டு தனி ஜமாஅத்தை உருவாக்கியவர் பி.ஜே. பி.ஜே கொள்கை முழுக்க முழுக்க ஒரு சென்னை தயாரிப்பு ஆகும். சத்தியப் பாதையில் இந்தக் கொள்கைக்கு எள் முனையளவும் இடமில்லை.

நபித்தோழர்கள் விசயத்தில் பி.ஜேயும் அவர் உருவாக்கிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பும் எவ்வளவு தூரம் தடம் புரண்டுவிட்டது என்பதை விளக்கும் அருமையான நிகழ் படம். காணத் தவறாதீர்கள்.

Leave a Reply